சென்னையில் நந்தனா பேலஸ் தனது மூன்றாவது கிளை திறப்பு
மாண்புமிகு அமைச்சர் T M அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்
நந்தனா பேலஸ் – சுவைக்க தூண்டும் சைவ மற்றும் அசைவ ஆந்திர உணவு வகைகளை வழங்கும் சிறந்த உணவகமாகும்
சென்னை, 7th ஜூலை 2023: நந்தனா பேலஸ் – பெங்களூரின் மிக பெரிய ஆந்திர உணவகம் தனது மூன்றாவது கிளையை, பார்ட்டி ஹால் வசதியுடன் சென்னை குரோம்பேட்டையில் தொடங்கியது. இதனை மாண்புமிகு அமைச்சர் T M அன்பரசன் (சிறு, குறு மற்றும் குடிசை தொழில்கள் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம்) அவர்கள் திறந்து வைத்தார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூர் நகரில் சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கிவரும் நந்தனா பேலஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் தனது முதல் உணவகத்தை OMR சாலையில் மினி பார்ட்டி ஹால் வசதியுடன் தொடங்கியது. இன்நிலையில் கடந்த வருடம் தனது இரண்டாவது கிளையை வேளச்சேரியில் துவங்கியது. தற்போது வெற்றிகரமாக மூன்றாவது கிளையை சென்னை குரோம்பேட்டையில் #322, முதல் தளம், டாடா மோட்டார்ஸ்-ன் மேல் தளம், GST சாலை என்ற முகவரியில் இன்று இனிதே துவங்கியது.
நந்தனா பேலஸ் பாரம்பரிய ஆந்திர உணவு வகைகளை சுவையும் மனமும் மாறாது வழங்கிவருகிறது. ஆந்திர மூன்று அத்தியாவசிய உணவு பொருட்களான குண்டூர் மிளகாய்,
இந்து ப்பூர் புளி, நெல்லூர் கோங்குரா மற்றும் ஆந்திரா மாநிலத்தின் மிக பிரபலமான ஆந்திரா பருப்பு, ஆவக்காய், மாங்காய் சட்னி, பருப்புப் பொடி ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.
நந்தனா பேலஸின் மூன்றாவது கிளை திறப்பு விழாவில், அடையார் ஆனந்த் பவன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் திரு.கே.டி. வெங்கடேஷ் ராஜா, திரு. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா ஆகியோர் முன்னிலையில் திரு.ராஜசேகரன், லிட்டில் பிளவர் கல்விக் குழும நிறுவனங்களின் நிறுவனர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்; திரு சுபாஷ் சந்திரா, நிர்வாக இயக்குனர், சங்கீதா மொபைல்ஸ் அவர்களும், திரு R V நிரஞ்சன் குமார், வழக்கறிஞர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடக்க விழாவினை சிறப்பித்தனர்
ஆந்திரா, ஹைதெராபாத் ,பல்வேறு உணவு வகைகள் மற்றும் பிரியாணி வகைகளை உலக தரம் வாய்ந்த அருந்தும் இடப் பகுதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் நந்தனா பேலஸ் தனி முத்திரை பதித்துள்ளது. நந்தன பேலஸில் தனக்கே உரிய சிறப்பு உணவு வகைகளான சிக்கன் ஆந்திரா ப்ரய், சிக்கன் குண்டூர் டிரய் மற்றும் வஞ்சிரம் தவா ப்ரய், மட்டன் சுக்கா,மட்டன் கீமா பால் ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், அனைவருக்கும் சிக்கன் க்ஷத்ரிய, ஷோலே கெபாப், பேம்பூ சிக்கன், கேரட் 65, காளான் நெய் 65, பேபி கார்ன் புதினா ட்ராய் ஆகிய உணவுகளையும் கொண்டு வந்துள்ளது.
டாக்டர் ஆர்.ரவிச்சந்தர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர், நந்தனா பேலஸ் கூறுகையில், “தரம், சிறந்த துரித சேவை, நல்ல அனுபவங்களை அளிப்பதே நந்தனாவின் தனி முத்திரை. சென்னை மற்றும் பெங்களூரில் நந்தனா பேலஸ் மொத்தம் 24 ரெஸ்டாரண்ட் கிளைகளை (கிளவுடு கிட்சன்களையும் சேர்த்து) கொண்டுள்ளது. இந்த இனிமையான தருணத்தில் நந்தனா பேலஸ் சென்னையில் தன் 3-வது கிளையை குரோம்பேட்டையில், GST சாலையில் இன்று தொடங்கியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம்” என்றார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், மற்றும் இந்த மாபெரும் திறப்பு விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்து எங்களை வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நந்தனா பேலஸ் குழுமத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply