We believe in Truth

இந்தியன் வங்கி மார்ச் 25 – ஜூன் 25-ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு.

இந்தியன் வங்கி மார்ச் 25 – ஜூன் 25-ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு.

கடந்த காலாண்டு மார்ச் – 25
முடிவில் ரூ.2956 கோடி என்பதிலிருந்து ஜீன்- 25 -ல் வங்கி நிகர லாபம் ரூ.
2973 கோடியாக அதிகரித்திருப்பதாக இந்தியன் வங்கியில் நிர்வாக இயக்குனர் பினோத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,ஜூலை-27, சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் காலாண்டு ஜூன் 30 நிறைவடைந்ததை அடுத்து இந்த காலாண்டில் இந்தியன் வங்கி மேற்கொண்ட சாதனைகளை குறித்து இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பினோத்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் .

அப்பொழுது அவர் பேசுகையில் :- இந்தியன் வங்கி கடந்த கால ஆண்டில் நிகர லாபம் ரூ. 2973 கோடியாக இருக்கிறது . கடந்த காலாண்டை விட ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு காலாண்டு நிகர லாபம் என்பது 23.69 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும்,
நிகர வட்டி வருவாய் இந்த காலாண்டில் ரூ.6,359 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு காலண்டோடு ஒப்பிடும்பொழுது இது 2.93 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

விவசாயம் சிறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கடந்த காலாண்டில் ரூ.3,63,221 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது
இந்தியன் வங்கியை பொறுத்தவரையில் கடந்த கால ஆண்டில் ரூ.7,44,289 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத வாரா கடன் அளவு என்பது 3.77 சதவீதத்தில் இருந்து 3.03 சதவீதமாக குறைந்து இருக்கிறதுள்ளது என அவர் பேசினார்.

உலக அளவில் இந்தியன் வங்கியில் மதிப்பு 13.45 லட்சம் கோடியாகவும் இந்தியன் வங்கியில் பங்குகளின் மதிப்பு 20. 26 சதவீதம் உயர்ந்தும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1426 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 1098 கிளைகள் இருப்பதாகவும் இந்தியாவில் இங்கதான் அதிகமாக இருப்பதாகும் அதாவது 19.1% கிளைகள் இருப்பதாகவும் தற்போது இந்த ஆண்டு மேலும் 10 கிளைகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் முக்கியமாக முதியவர்களுக்கு அடையாறு பகுதியில் புதிய கிளை திறக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *