இந்திய அரசியலில் ஓர் தொழில்நுட்ப புரட்சி…
அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (AMPi) – புதிய அரசியல் கட்சி உதயம்
சென்னை, ஜனவரி 05, 2023: இந்தியா, தகுதி வாய்ந்த வாக்காளர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதும் வாக்களிப்பதும் நமது அரசியலமைப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ஆகும். நாட்டின் அரசியல் ஒழுங்கு, மாநில சுயாட்சி முறை, அரசின் அதிகாரங்கள், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், பேச்சுரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை உள்ளிட்ட பல உரிமைகளுக்கான உத்திரவாதம் முதலியவற்றை நமது அரசியல் சாசனம் உள்ளடக்கியிருக்கிறது. இருப்பினும் இந்த மண்ணின் சட்டங்கள் பலராலும் பின்பற்றப்படுவதில்லை. வாரிசு அரசியல், ஒதுக்கிவைக்கும் போக்கு, ஊழல், முதலாளித்துவ மனப்பாங்கு ஆகியவற்றின் தாக்கத்தால் அரசியல் என்பது நேர்மறையாகப் பார்க்கப்படுவதில்லை.
நிர்வாகம், சட்டமன்றம், அரசியல் பதவிகள் ஆகியவற்றில் போதுமான தகுதி படைத்தவர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, நாட்டின் வள ஆதாரங்கள் மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன. திறமையும் சாதிக்கும் எண்ணமும் கொண்ட இளைஞர்கள் இதனால் பின்தள்ளப்படுகின்றனர். அவர்களது கருத்துக்கள் வீணடிக்கப்படுகின்
றன. எடுத்துக்காட்டாக, நிதி அல்லது சுகாதாரத்துறை ஆகியவை, அத்துறைகளில் எவ்வித அனுபவமற்ற அரசியல்வாதிகள் கைகளில் ஒப்படைக்கப்படுவதாகக் கொள்வோம். அதன் விளைவாக, திறனற்ற கொள்கை முடிவுகள், திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம், அரசு நிதி தவறாகக் கையாளப்படுவது ஆகியவை நிகழ வாய்ப்புண்டு.
அண்மையில் தொடங்கப்பட்டுள்ள அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி – ஆம்ப்பீ (Allied Millennials Party of India – AMPi) இந்த நிலையை மாற்றும். படித்த, திறமைமிகுந்த இளைஞர்களுக்கு அரசியலில் பங்கேற்கவும் நாட்டுக்கு உழைக்கவும் நல்லதோர் வாய்ப்பை இக்கட்சி வழங்க இருக்கிறது., சரியானவர்களை எவ்விதமான ஒதுக்குதலுக்கும் உட்படுத்தாமல் அவர்களுக்கு நல்ல தளத்தை இக்கட்சி ஏற்படுத்தித்தர உறுதிபூண்டுள்ளது. தகுதியும் வல்லுநத்துவமும் வாய்ந்த அவர்களுக்கு வெளிப்படைத்தன்மை மிகுந்த அரசியலில் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்சி, தகுதியான, திறமையானவர்க்ளை மட்டுமே தேர்ந்தெடுத்து அரசின் முக்கியப் பதவிகளில் அமர்த்தும்.
அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் நிறுவனர், திரு.கவுதம் சாகர் மஹாயான் ஆவார். நாட்டிலுள்ள இளைஞர்களை வலுப்படுத்துவதே அவரது குறிக்கோள் ஆகும். இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த நவம்பர் 11, 2021 அன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். திரு.கவுதம் பேசுகையில், “மற்ற கட்சிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கட்சியாக எங்களது கட்சி இருக்கும். உண்மையிலேயே திறமையுள்ளவர்களை வெளியே கொண்டுவந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம். தகுதிவாய்ந்த தனி நபர்களும் தொழில்நுட்பமும் சேர்ந்தே எதிர்காலத்தை வழிநடத்தும் என்ற தத்துவத்தை நாங்கள் திடமாக நம்புகிறோம். படித்த இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களை அரசியலில் ஈடுபடச் செய்வதே கட்சியின் இலக்கு ஆகும். சமூகப் பொருளாதார சூழலுக்கு சரியான தீர்வுகளைக் கண்டடைவதும் சரியானதொரு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் எங்களது நோக்கமாகும். அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவது, பொறுப்புணர்வு, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற நிலை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பதில் கூறும் கடமை படைத்த நிர்வாகம், எல்லா வகையான ஒதுக்குதலிலிருந்தும் விடுதலை ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இளைஞர்களாக எங்கள் கட்சியினர் இருப்பார்கள். தொழில்நுட்ப அறிவுகொண்ட இளைஞர்குழுவாக நாங்கள் இருந்தாலும், நமது பாரம்பரிய அறிவுச்செல்வத்தின் மீது நம்பிக்கையும் நன்மதிப்பு கொண்டவர்களாகவும் இருப்போம்”, என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “எங்களது கட்சி, எட்டு அம்சக் கொள்கைகளைக் கொண்டுள்ளது. சரியான புரிதல்/பார்வை, சரியான நோக்கம்/மனோபாவம், சரியான மன நிறைவு, சரியான பேச்சு, சரியான வாழ்வாதாரம், சரியான குழு, சரியான முயற்சி/செயல்பாடு மற்றும் கூட்டுறவு ஆகியவை அவை. தகுதி, ஆரோக்கியமான உரையாடல், சிக்கனம், பொருளாதார ஜனநாயகம் ஆகியவற்றில் நாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இக்கட்சி, அதே கருத்தியலை (ideology) தனது தேர்தல் அறிக்கையிலும் கொண்டுள்ளது. திறம்வாய்ந்த ஆற்றல் பயன்பாடு, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி, நீர் நிர்வாகம், நிலத்தடிநீர் சேமிப்பு, நிலத்தை அதிகபட்ச பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், சிறப்பான கழிவு மேலாண்மை, கூட்டுறவு இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்தல் ஆகிய முக்கியக் கொள்கைகளை இக்கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது”, என்றார்.
ஆம்ப்பீ கட்சியின் கொடி, கருப்பு மற்றும் பொன்னிறத்தைக் கொண்டுள்ளது. இவை வனப்பு, தொழில் நேர்த்தி, நடுவு நிலைமை, ஆற்றல், எளிமை ஆகியவற்றைக் குறிக்கிறது. பொன்னிறம், கருணை, தாராளம், புனிதத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இக்கொடியில் இடம்பெற்றுள்ள மூன்று நட்சத்திரங்கள் – பாதுகாப்பு, கூட்டுறவு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும், வட்டம், வைரம் மற்றும் கிரீடம் இலச்சினைகள் ஆளுமையையும் குறிக்கின்றது.
கூடுதல் தகவல்களுக்கு:
அலைடு மில்லென்னியல் பார்ட்டி ஆஃப் இந்தியா,
1, முதல் தளம், வி.ஜி.பி. விக்டரி ஹவுஸ்,
அண்ணா சாலை, சென்னை-600 002.
தொலைபேசி: 72001 98791
2, இணையதளம்: https://ampi.party/
சமூக ஊடகங்கள்: https://twitter.com/ampiparty | https://www.facebook.com/ampiparty/
Leave a Reply