அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்திற்கு மீண்டும் கடாய் சின்னம்
வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறினார் நிறுவனத் தலைவர்
டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள்
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற இப்பத்திரிக்காளர் சந்திப்பில்
நடைபெற உள்ள ஈரோடு இடைத் தேர்தலில் எங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால்
தொகுதி வாக்காளர்களுக்காக குரல் கொடுத்து நாங்கள் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம் என்கிற எங்கள் கட்சி 2018 தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இதுவரை மூன்று முறை தேர்தலை கடாய் சின்னத்தில் சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம் இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டு எங்களுக்கு கடாய் சின்னத்தை மீண்டும் கொடுத்துள்ளார் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் ஒருவரை வேட்பாளராக நியமித்துள்ளோம்
என்றார்
மேலும் பேசிய அவர்
சாயக்கழிவு சுத்தகரிப்பு தொழிற்சாலை நவீன முறையில் அமைக்கப்படும்.
துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற்சாலைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள இடையூறுகள் அகற்றப்பட்டு முறைப்படுத்தப்படும்.
வேலை இல்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் மேம்படுத்தும் வண்ணத் திட்டங்கள் வகுக்கப்படும்.
குடும்பத்திற்கு ஒரு அரசு அதிகாரி கட்டாயம் என்ற நோக்கில் அனைவரும் பயன்பெறும் நோக்கில் இலவச தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.
பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு நீடித்து நிலைத்து வளர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டுதல்களும் உதவிகளும் செய்து தரப்படும்.
பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
இயற்கை சீர் கேடுகளான நீர் மாசுபாடு, நிலம் மாசுபாடு, காற்று மாசுபாடு போன்றவற்றை களைவதற்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சமூக நலத்திட்டங்கள் சீர்மைப்படுத்தப்படும்.
அரசு பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் புதுப்பிக்கப்படும் மற்றும் கட்டிடங்கள் சீர்படுத்தப்படும்
அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருப்பது 100%.
ஆரம்பப் பள்ளிகளில் புலன் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அனைத்து பள்ளிகளிலும் புத்தக பூங்காக்கள் முறையாக செயல்பட பள்ளிகளில் ஆசிரியர் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
மஞ்சள் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக மாற்றப்பட்டு சந்தை படுத்தப்படும்
போன்ற பல்வேறு கோரிக்கைளை நடைமுறைப்படுத்துவோம் என்றார்
இந் நிகழ்ச்சியில் அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகத்தின் மாநில மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Leave a Reply