கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கல்வி மூலம் சுதந்திரம்(Freedom Through education) திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சவுத் மற்றும் ஏஎஸ் ட்ரஸ்ட் இணைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
மாங்காட்டில் உள்ள பி.எஸ்.பி.பி.மெட்ரிக் பள்ளி மற்றும் கெருக்கம் பாக்கத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக கல்வியை கற்றுக் கொள்ளும் விதமாக கல்வி மூலம் சுதந்திரம் என்ற திட்டத்தின் மூலம் ரோட்டரிக் கிளப் ஆப் மெட்ராஸ் சவுத் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஏ எஸ் டிரஸ்ட் இணைந்து சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன… இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாநில ஆளுநர் நந்தகுமார்,ரோட்டரி மாவட்ட தலைவர் ஜவஹர் நிச்சானி, கிரியேஷன் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ரொட்டேனே ஆஷமெரினா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக cfo ஆக்சிஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி உபகரணங்களை வழங்கினர்…
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரொட்டேனே ஆஷமெரினா
தான் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சவுத் சாரிட்டபிள் ட்ரஸ்டில் உறுப்பினராக இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் கிரியேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும் எங்களது டிரஸ்ட் மூலமாக இன்று சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும்,எங்களது ரோட்டரி மாவட்ட தலைவர் இதற்காக ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து சுமார் 9 பள்ளிகளை தேர்வு செய்துள்ளார் தற்போது இரண்டு பள்ளிகளுக்கு இந்த உதவிகளை வழங்கப்பட்டுள்ளன வரும் காலங்களில் மீதமுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என கூறினார்…
Leave a Reply