We believe in Truth

மாணவர்கள் இரு மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என உயிர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்.செழியன் பேச்சு

மாணவர்கள் இரு மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என உயிர்கல்வித்துறை அமைச்சர் கோவிச்.செழியன் பேச்சு

பாரத் பல்கலைக்கழகத்தில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்… பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழக சேர்மன் ஜெகத்ரட்சகன் எம்பி, டாக்டர் மதன்மோகன் திரிப்பாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்… இந்த ஆண்டு 148 முனைவர் பட்டம், 667 முதுகலை பட்டம், 4,463 இளங்கலை பட்டம் என 5,278 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்

பாரத் பல்கலைக்கழகம் உயர் கல்வித் துறையில் உலக அளவில் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி வருகிறது. கலைஞர் அவர்களால் ஆழ்வார் என்று அழைக்கக்கூடியவர் ஜெகத்ரட்சகன் எம்பி அவர்கள் என புகழாரம் சூட்டினார்… அவரது தலைமையின் கீழ் இயங்கக்கூடிய இந்த பல்கலைக்கழகம் 41 வது பட்டமளிப்பு விழா மட்டுமல்லாமல் 241வது பட்டமளிப்பு நிகழ்ச்சியையும் நடத்திடும் என கூறினார்

இதுவரை மாணவ மாணவிகளாக இருந்த நீங்கள் இன்று முதல் பட்டதாரிகளாக உயர்ந்து உள்ளீர்கள்

உயர்கல்வித்துறையில் இந்தியாவின் சதவீதம் 28% மட்டுமே ஆனால் தமிழகம் 48 சதவீதத்தை அடைந்திருக்கிறது என கூறியவர் இதற்கு அடித்தளம் டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் என புகழாரம் சூட்டினார்

இருமொழிக் கொள்கையை மாணவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *