We believe in Truth

தீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி

தீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி & ரிலாக்ஸாலஜி

இன்றைய தேதியில் படிக்கும் மாணவர்கள் முதல் ஓய்வில் இருக்கும் பெரியவர்கள் வரை டென்ஷன் எனப்படும் மன பதட்ட பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள். மேலும் பல்வேறு உடலியக்க பாதிப்புகளுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக குணமடையாமல் வலியுடன் தவித்து வருகிறார்கள். சோசியல் மீடியாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இன்றைய இணைய தலைமுறையினர்.. எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை தூக்கமின்மை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான நிவாரண தரும் சிகிச்சையாக ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மசாஜ் எனும் பாத அழுத்த சிகிச்சை அறிமுகமாகி, நல்ல பலனை வழங்கி வருகிறது. இத்தகைய சிகிச்சையை வழங்குவதில் சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி மையம், தரமான சேவையை குறைவான கட்டணத்தில் அளித்து, பயனாளிகளிடம் நன்மதிப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

இன்றைய மக்கள் தொகையில் இருபத்தைந்து சதவீதத்தினருக்கு மேல் இனம் கண்டறிய இயலாத உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். இதற்காக பல்வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சைகள் பெற்றாலும், முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு மன பதட்டம், மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக தூக்கமின்மை, பசியின்மை, ஜீரணக் கோளாறு, ரத்த அழுத்த பாதிப்பு, முதுகு வலி, மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, கண் பார்வை குறைபாடு.. போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பை நார்த் திசுக்கட்டி, வயிறு பிரச்சனைகள், கொழுப்பு கட்டி.. போன்ற பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். மேலும் மாணவர்களிடத்தில் நினைவுத்திறன் குறைவு, ஞாபகம் மறதி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நாட்பட்ட சளி போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

எத்தகைய சிகிச்சையை மேற்கொண்டிருந்தாலும் அவர்கள் எங்களிடத்தில் ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி மசாஜ் எனும் சிகிச்சையை பெற்றால் அவர்களுக்கு, மன அழுத்த பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலுக்கு சக்தி ஆற்றல் கூடுதலாக கிடைத்து, அவர்கள் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படுவார்கள்.

இந்த மருத்துவம் பல நூற்றாண்டுகளாக உலக மக்களுக்கு பலனளித்து வரும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் அடிப்படை விசயங்களை நவீன முறையில் வழங்குவதாகும். குறிப்பாக நம்முடைய பாதங்களில் உள்ள ஐந்து விரல்கள், குதிகால், கால்களின் நடுப்பகுதி, மேல் பகுதி.. என பாதத்தில் மட்டும் மூளை, கழுத்து, சைனஸ், கண்கள், காதுகள், தோள்பட்டை, உதரவிதானம், பித்தப்பை, கல்லீரல், சிறுகுடல், சயாட்டிக் நரம்புகள், பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, நுரையீரல், மார்பகம், இதயம், தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பிகள், சிறுநீரகம், தண்டுவடம், சிறுநீர்ப்பை என உடலின் அனைத்து உறுப்புகளுக்கான மெரிடியன் புள்ளிகள் எனப்படும் சக்தி ஓட்ட புள்ளிகள் இருக்கிறது.

இந்த புள்ளிகளை சீரான அழுத்தத்துடனும், மசாஜ் எனும் இயல்பான முறையில் நீவி விடுவதாலும் அதன் இயக்கம் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீரடைந்து, இயக்க ஆற்றல் புத்தாக்கம் பெற்று, உடலுக்கு சக்தி முழுமையாக கிடைக்கிறது. இதன் காரணமாக தொடர்புடைய உறுப்புகளின் இயக்கத்தில் ஏதேனும் தடையோ.. இடையூறுகளோ.. ஏற்பட்டிருந்தால் அவை விலகி, உடலின் இயக்கம் சீரடைகிறது. இதன் மூலம் மனம் மற்றும் மூளையின் செயல் திறன் இயல்பாகி, உடல் ஆரோக்கிய நிலைக்கு திரும்புகிறது.

ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி (https://athenafootrelexology.com/)முறையை பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இந்த சிகிச்சைகளின் மூலம் சில பாதிப்புகளை தவிர்த்து பெரும்பாலான குறைபாடுகளுக்கு முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள கங்கப்பா தெருவில் தொடங்கி இருக்கும் எங்களது அதீனா ஃபுட் ரிப்ஃளெக்சாலஜி மற்றும் ரிலாக்ஸாலஜி மையத்தில் அறிமுக சலுகையாக 45 நிமிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைக்கு 850 ரூபாய்க்கு பதிலாக 600 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறோம். மேலும் பயனாளிகள் விரும்பும் கால அவகாசத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு 500 ரூபாய் என கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். இத்துறையில் பயிற்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்படுவதால், பயனாளிகளுக்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது.

எங்களின் அறிமுக சலுகையை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்களுடைய பாதிப்புகளிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ” என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள +91 7845 570 574என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Athena Foot Reflexology & Relaxology
• No.2(33), Gangappa Naidu Street, Saligramam, Chennai – 600 093. {Opposite AVM Studio}
• Mon – Sati: 11:00 am to 9:00 pm
• Email: athenafootrelax@gmail.com
• Contact Number: +91 7845 570 574
(Web : https://athenafootrelexology.com/)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *