எஸ் ஆர் எஸ் வித்யா மந்திர் சி பி எஸ் சி மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்து வடகடம்பாடியில் அமைந்துள்ள எஸ் ஆர் எஸ் வித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி தாளாளர் சரோஜினி ராஜேந்திரன், பள்ளி இயக்குனர் சுகன்யா ராஜேந்திரன், எஸ் கே கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் அவர்கள் மழலையர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர்… இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல கண் டாக்டர் ஸ்ரீதர் பரதன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தொலைபேசியில் அதிக பயன்பாட்டினால் இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் கண் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளை தெளிவாக எடுத்துரைத்தார்… முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி சாரணர் சாரணியர் அணி வகுப்புடன் வரவேற்று, நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்துடன் தொடங்கி, மழலையரின் ஆடல் பாடல் நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது…இந்தப் பட்டமளிப்பு விழாவை பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி லட்சுமி பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்… இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply