2023 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு / அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது
நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது
செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
● நிகர இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1225 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது
● வரிக்கு முந்தைய இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1571 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹2752 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 75% உயர்ந்திருக்கிறது
● செயல்பாட்டு இலாபம் செப்டம்பர்’22-ல் ₹3629 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹4303 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது
● நிகர வட்டி வருவாய் செப்டம்பர்’22-ல் ₹4684 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹5741 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்திருக்கிறது
● கட்டணம் சார்ந்த வருவாய், செப்டம்பர்’22-ல் பதிவான ₹723 கோடியைவிட 11% அதிகரித்து செப்டம்பர்’23-ல் ₹805 கோடி என உயர்ந்திருக்கிறது
● உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), செப்டம்பர்’22-ல் 3.20% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 3.52% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
● சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) செப்டம்பர்’22-ல் 0.71% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 1.06% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
● பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) செப்டம்பர்’22-ல் இருந்த 13.83% என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் 607 bps மேம்பட்டு 19.90% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
● வருவாய்க்கான செலவு விகிதம் செப்டம்பர்’22-ல் 44.27% என்பதற்குப் பதிலாக இப்போது 44.36% என பதிவாகியிருக்கிறது
● மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, செப்டம்பர்’22-ல் ₹1026801 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1133091 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
● செப்டம்பர்’22-ல் ₹437941 கோடி என்று இருந்த மொத்த கடன்கள், செப்டம்பர்’23-ல் 12% வளர்ச்சி பெற்று ₹492288 கோடியாக அதிகரித்திருக்கிறது
● RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர்’22-ல் ₹255256 கோடி என்ற அளவிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹285891 கோடியாக உயர்ந்து 12% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
● ரீடெய்ல், விவசாயம், MSME ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 14%, 16%, மற்றும் 5% என அதிகரித்திருக்கின்றன. உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 62% ஆக இருக்கிறது.
● முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 13%, ஆட்டோமொபைலுக்கான கடன் 36% மற்றும் தனிநபர் கடன் 49% என அதிகரித்திருக்கின்றன
● வைப்புத்தொகைகள் (டெபாசிட்கள்), முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்து செப்டம்பர்’23-ல் ₹640803 கோடி என்ற அளவை எட்டியிருக்கின்றன
● சேமிப்பு கணக்கில் முந்தைய ஆண்டைவிட பதிவான 8% உந்துதலால் CASA டெபாசிட்கள் 7% வளர்ச்சி கண்டிருக்கின்றன. CASA விகிதம் 40% என்ற அளவில் செப்டம்பர்’23-ல் இருக்கிறது.
● GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’22-ல் இருந்த 7.30% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 233 bps குறைந்து 4.97% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’22-ல் இருந்த 1.50% லிருந்து செப்டம்பர்’23-ல் 90 bps குறைந்து 0.60 % ஆக பதிவாகியிருக்கிறது
● வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), செப்டம்பர்’22-ல் இருந்த 91.08% லிருந்து செப்டம்பர்’23-ல் 456 bps அதிகரித்து 95.64% ஆக பதிவாகியிருக்கிறது
● மூலதன போதுமான நிலை விகிதம் 15.53% என்பதாகவும் மற்றும் CET-I என்பது 12.07% & அடுக்கு I மூலதனம் 12.63% என்ற அளவிலும் பதிவாகியிருக்கின்றன.
முக்கிய சிறப்பம்சங்கள்
(ஜுன்’23 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
● நிகர இலாபம் ஜுன்’23-ல் பதிவான ₹1709 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 16% உயர்ந்திருக்கிறது
● வரிக்கு முந்தைய இலாபம் ஜுன்’23-ல் ₹2394 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹2752 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 15% உயர்ந்திருக்கிறது
● செயல்பாட்டு இலாபம் ஜுன்’23-ல் ₹4135 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹4303 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 4% உயர்ந்திருக்கிறது
● நிகர வட்டி வருவாய் ஜுன்’23-ல் ₹5703 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹5741 கோடியாக அதிகரித்திருக்கிறது
● சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) முந்தைய காலாண்டைவிட 11 bps உயர்ந்து செப்டம்பர்’23-ல் 1.06% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
● பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) முந்தைய காலாண்டைவிட 202 bps உயர்ந்து, செப்டம்பர்’23-ல் 19.90% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
● முன்னுரிமை துறைக்கான போர்ட்ஃபோலியோ, செப்டம்பர்’23-ல் ₹164341 கோடி என்ற அளவில் இருந்தது. ANBC-ன் ஒரு சதவீதமாக முன்னுரிமை துறைக்கான கடன்கள், ஒழுங்குமுறை தேவைப்பாடான 40% என்பதற்கு எதிராக 42.83% என உயர்ந்திருக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்
(செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த அரையாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு)
● நிகர இலாபம் H1FY23-ல் (நிதியாண்டு 23-ன் முதல் அரையாண்டில்) பதிவான ₹2439 கோடியிலிருந்து H1FY24-ல் ₹3697 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52% உயர்ந்திருக்கிறது
● வரிக்கு முந்தைய இலாபம் H1FY23-ல் ₹2917 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹5146 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76% உயர்ந்திருக்கிறது
● செயல்பாட்டு இலாபம் H1FY23-ல் ₹7194 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹8437 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY24-ல் 17% உயர்ந்திருக்கிறது
● நிகர வட்டி வருவாய் H1FY23-ல் ₹9218 கோடி என்பதிலிருந்து H1FY24-ல் ₹11444 கோடியாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் H1FY24-ல் 24% உயர்ந்திருக்கிறது
● உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), H1FY23-ல் பதிவான ₹3.15% லிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 bps அதிகரித்து 3.57% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
● சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA) H1FY23-ன் 0.72% லிருந்து 29 bps உயர்ந்து 1.01% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
● பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE) H1FY23-ன் 14.00% லிருந்து 490 bps உயர்ந்து, 18.90% என முன்னேற்றம் கண்டிருக்கிறது
● வருவாய்க்கான செலவு விகிதம் H1FY23-ல் இருந்த 43.14% என்பதற்கு எதிராக 44.29% என்பதாக பதிவாகியிருக்கிறது
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
● இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5819 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1974 கிராமப்புறங்களிலும், 1522 சிறு நகரங்களிலும், 1174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1149 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IFSC பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.
● இவ்வங்கி, 4866 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10825 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
● மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 47% உயர்ந்திருக்கிறது.
● UPI பயனாளிகள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட முறையே 34% மற்றும் 65% அதிகரித்திருக்கிறது.
● இவ்வங்கி அதன் டிஜிட்டல் நிலைமாற்ற செயல்திட்டத்தின்கீழ் இதுவரை 63 டிஜிட்டல் பயன முன்னெடுப்புகளை அறிமுகம் செய்து செயல்படுத்தியிருக்கிறது.
● இப்போது 86% பரிவர்த்தனைகள் டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெறுகின்றன.